உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், இந்த நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியானது நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வருகின்ற அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை உலகக் கோப்பை டி20 போட்டியானது, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டதால், அந்நாடு தன்னுடைய எல்லைகளை மூடிவிட்டது. வருகின்ற செப்டம்பர்-30ம் தேதி வரை தன்னுடைய சர்வதேச எல்லையினை ஆஸ்திரேலியா நாடு மூடியுள்ளது.
இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, ஐசிசி நிர்வாகம் தற்பொழுது கூட்டத்தினை நடத்தியுள்ளது. அதில், பல முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எவ்வித முடிவினையும் எடுக்க முடியாது எனக் கூறியுள்ளது.
அவசரப்பட்டு முடிவு எடுத்தப் பின், அதனை நினைத்து வருத்தப்படக் கூடாது எனவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு, டி20 உலகக் கோப்பையினை நடத்தலாமா, வேண்டாமா என்பது பற்றி ஆகஸ்ட் மாதக் கடைசியில் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளது. இப்பொழுதுள்ள நிலையானது சரியாவதற்கு, எப்படியும் சில மாதங்கள் ஆகும் எனவும், அதனால், ஆகஸ்ட் மாத இறுதியில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.