ஆணுறுப்பினை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது?

23 January 2020 உடல்நலம்
penishealth121.jpg

ஆணுறுப்பினை ஒழுங்காக சுத்தமாக வைத்துக் கொள்ளாத காரணத்தினால், பலவிதமான சிக்கல்களை தற்பொழுதுள்ள நவீன யுகத்தில், பெரும்பாலான ஆண்கள் சந்திக்கின்றனர். சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், அலர்ஜி, தொற்று நோய் முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

உணவு

அதிகளவில் கொழுப்பு சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உங்களுடைய அடிவயிறு தொங்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு தொங்க ஆரம்பித்து விட்டால், உங்கள் ஆணுறுப்பால் நீண்ட நேரம் கட்டிலில் தாக்குப் பிடிக்க இயலாது. எனவே, கொழுப்பு உணவுகளை முடிந்தவரைத் தவிர்த்து விட்டு, நார்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றினை எடுத்துக் கொள்ளவும்.

உடைகள்

உள்ளாடைகளை துவைத்து பயன்படுத்தவும். ஒரு நாளைக்கு, ஒரு உள்ளாடையைப் பயன்படுத்தவும். இன்று பயன்படுத்திய உள்ளாடையை துவைக்காமல், நாளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு, பயன்படுத்தினால், உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் தொற்று நோய் ஏற்படும். மேலும், ஒரு வீட்டில் சகோதரர்கள் இருவர் இருந்தால், இருவரும் தனித் தனியாக தங்கள் உடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், கண்டிப்பாக தொற்று நோய் அலர்ஜி முதலானவை ஏற்படும்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தினமும் குளித்தல்

தினமும் குளிர்ச்சியான நீரில் குளிக்கவும். சூடான நீரில் குளிப்பதைக் காட்டிலும், குளிர்ந்த நீரில் குளிக்கும் பொழுது, உடலில் உள்ள சூடு குறையும். மேலும், உடலில் உள்ள செல்களும், நரம்புகளும் புத்துணர்ச்சி அடையும். இதனால், உடலின் சூடு தனிந்து இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

ஷேவிங் செய்தல்

இதனைப் பெரும்பாலான ஆண்கள் செய்கின்றனர். பிறப்புறுப்புப் பகுதியில் ஷேவ் செய்வது அவசியம். அடிக்கடி முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது, ஷேவ் செய்ய வேண்டும். அவ்வாறு ஷேவ் செய்வதன் மூலம், அந்தரங்கப் பகுதிகளில் வியர்வையின் மூலம் உருவாகும், துர்நாற்றம் நீங்கும்.

எவ்வாறு ஷேவ் செய்ய வேண்டும்?

ஒரு சிலருக்கு இந்தப் பயம் உண்டு. பலர், அந்தப் பகுதிகளில் ஷேவ் செய்யவேப் பயப்படுகின்றனர். ஒருவேளை, பிளேட் படக்கூடாத இடத்தில் பட்டுவிடுமோ எனவும் அஞ்சுகின்றனர். முதலில் ஷேவ் செய்யும் இடத்தினைச் சுற்றிலும், குளிர்ந்த நீரினால் கழுவவும். அவ்வாறு செய்யும் பொழுது, அந்தப் பகுயில் உள்ள முடிகள் சற்று தளர்வடையும். அப்பொழுது, ஷேவிங் ஜெல் அல்லது ஷேவிங் க்ரீமினைப் பயன்படுத்தி, ஷேவ் செய்யலாம். பின்னர் கற்றாழை சாறு அல்லது ஷேவிங் லோசனைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளில் தேய்த்து விடவும்.

அவ்வாறு, செய்வதன் மூலம் ஆணுறுப்புப் பகுதியானது சுத்தமடையும். மேலும், வயது வந்த ஆண்கள், குளிக்கும் பொழுது, ஆணுறுப்பின் மேல் தோலினை விலக்கிவிட்டு, அதனையும் சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுது, பிறப்புறுப்புப் பகுதியில் இருந்து எவ்வித நாற்றமும் வீசாது.

தொடர்ந்து இது போன்ற முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆணுறுப்பானது சுத்தமாக இருக்கும்.

HOT NEWS