விந்து விரைவில் வெளியேறாமல் இருக்க இதை செய்யுங்க!

06 December 2019 உடல்நலம்
sperm.jpg

கல்யாணம் ஆனவர்களைக் காட்டிலும், கல்யாணத்திற்குத் தயாராகும் ஆண்களுக்குத் தான் அதிக மன உளைச்சல். நம்முடைய ஆண் குறி சரியான அளவில் உள்ளதா, மனைவியை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியுமா, விந்து விரைவாக வெளியாகின்றதே எனப் பலவிதப் பிரச்சனைகளும், மன சங்கடங்களும் உள்ளன. ஒரு சிலர் தைரியமாக, மருத்துவர்களிடம் சென்று, தங்களுடைய சந்தேகங்களுக்குத் தீர்வு காணுகின்றனர்.

ஆனால், பலரும் இதுபற்றி தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பேசவே கூச்சப்படுகின்றனர். ஆணுறுப்புப் பற்றி ஏற்கனவே பல பதிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கட்டுரையில், விந்து விரைவில் வெளியாகாமல் இருக்கவும், ஆண்மை அதிகரிக்கும் உண்ண வேண்டிய எளிய உணவு முறையப் பற்றிப் பார்ப்போம்.

அனைத்து நாட்டு மருத்துவர்களுக்கும் தெரிந்த, அனைத்து நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும் ஜாதிக்காய் பொடியை வாங்கிக் கொள்ளவும். அல்லது, ஜாதிக்காயினை வாங்கி, அடுப்பில் வறுக்க வேண்டும். பின்னர், வறுத்த ஜாதிக்காயினை எடுத்து, ஒரு துணியில் முடித்து, அதனைப் பொடியாக நுணுக்க வேண்டும். அதற்குப் பின்னர் அதனை, மிக்சியில் போட்டு தூள் தூளாகமாறு, பொடியாக்க வேண்டும்.

அவ்வாறு நாம் பொடியாக்கினாலும், ஒரு சிலப் பெரிய துண்டுகள் இருக்கும். எனவே, இந்த ஜாதிக்காய் பொடியினை சலித்து எடுக்க வேண்டும். இவ்வாறு சலித்தப் பொடியினை ஒரு டப்பாவில் பத்திரமாக மூடி வைக்க வேண்டும். தினமும் இரவு உறங்குவதற்கு முன், காய்ச்சியப் பசும்பாலில், இந்த ஜாதிக்காய் பொடியில் சிறிதளவு கலக்கவும். பின்னர் அதில் அரை டீ ஸ்பூன் அளவிற்கு தேன் போட்டுக் கலக்கவும். அதில், பேரிட்சை பழம் ஒன்றினை சிறியத் துண்டுகளாக வெட்டி, அதனைப் பாலில் கலக்கவும். பின்னர், ஏலக்காய் ஒன்றினை எடுக்கவும். அந்த ஏலக்காயின் உள்ளே, கருப்பு நிறத்தில் முத்துக்கள் இருக்கும். அதனை எடுத்துப் பாலில் போடவும்.

அதனுடன் முந்திரிப் பருப்பின் பொடியினை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும். தற்பொழுது, அந்தப் பாலில் உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியினை வழங்குவதற்கான அனைத்து விஷயங்களும் இருக்கும். இரும்புத் தாது, விட்டமின்கள், கொழுப்பு உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால், அப்பால் மிகவும் சக்தி உள்ளதாக இருக்கும். இதனை தினமும் கொஞ்சம் ஆற வைத்து உறங்குவதற்கு முன் குடிக்கவும்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதனை நீங்கள் தொடர்ந்து குடிக்கும் பொழுது, உடலில் உள்ள நரம்புகளுக்கு அதிக சக்தியானது கடத்தப்படும். தொடர்ந்து 108 நாட்கள் குடிக்கும் பொழுது, உடலில் சுருங்கிக் கிடந்த நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். காலையில், யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதனை ஆண்கள் சரியாகக் கடைபிடிக்கும் பொழுது, கண்டிப்பாக இயற்கையான முறையில், எவ்விதப் பக்கவிளைவும் இன்றி, உடல் வலிமை அடையும். ஆண்மையும் அதிகரிக்கும்.

நீர்த்துப் போன விந்தணுவும் கட்டித் தன்மை அடையும். விரைவில் விந்து வெளியாகாமல் உடல் தாக்குப் பிடிக்கும். ஆணுறுப்பின் வலிமையும் அதிகரிக்கும் என, புராதண இயற்கை வைத்தியாமகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

HOT NEWS