உங்கள் ஆணுறுப்பில் அதிக நரம்புகள் தெரிகின்றதா? அப்போ அவ்வளவு தான்!

16 March 2020 உடல்நலம்
penisgenitals.jpg

அனைத்து ஆண்களுக்கும் உள்ள பெரியப் பிரச்சனைகளுள் ஆண்மைக் குறைவு, ஆணுறுப்பு மற்றும் செக்ஸ் குறித்த சந்தேகங்கள் தான் பெரியத் தலைவலியாக இருக்கின்றன. இதனை வெளியில் சொல்ல வெட்கப்படும் ஆண்கள், பயத்துடனேயே காலத்தினை கடத்துகின்றனர்.

திருமணம் ஆன ஆண்களை விட, திருமண வயதில் உள்ள ஆண்களுக்கும், திருமணம் செய்து கொள்ள உள்ள ஆண்களுக்குமே இந்தப் பயமானது அதிகமாக உள்ளது. இதனால், கடும் மன அழுத்தமும் ஏற்படுகின்றது. அவ்வாறு இருக்கும் பயங்களில் ஒன்று தான், ஆண்குறியில் நரம்புகள் தெரிவது. இது பற்றி விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

உடலின் மற்றப் பாகங்களை விட, சற்று வித்தியாசமானது தான் ஆண்குறி. அதில், எலும்புகள் கிடையாது. இரத்த நாளங்களும், விந்தணு சுரப்பிகளும், சுவை மொட்டுக்களும், மென்மையானத் திசுக்களுமே உள்ளன. இவைகளால் தான் ஆணுறுப்பானது, உருளை வடிவில் காணப்படுகின்றது. உண்மையில், ஒரு நல்ல ஆரோக்கியமான ஆணுறுப்பானது, உருளை வடிவில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், சூம்பிப் போன வாழைக்காயை போலவோ அல்லது பிற காய்கறிகளைப் போலவோ இருந்தால், ஆண்குறிப் பலவீனமாக இருக்கின்றது என அர்த்தம்.

ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு கைகளில் நரம்புகள் தெரிவதைப் பார்த்து இருப்பீர்கள். அது சிறிது நேரத்தில், அடங்கிவிடும். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது உடல் உழைப்பு. அதிகளவில் கைகளுக்கு வேலைக் கொடுக்கும் பொழுது, கைகளில் நரம்புகள் தெரியும். பின்னர், வேலையை நிறுத்தி விட்டால் நரம்புகள் மறைந்துவிடும். அதிகப்படியான தசை விரிவும், அதற்காக அதிளவில் இரத்த ஓட்டம் ஏற்படுவதுமே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அது போலத் தான் ஆணுறுப்பும். அதிகப்படியான இரத்த ஓட்டம் ஏற்படும் பொழுது, ஆண்குறியில் நரம்புகள் வெளிப்பட ஆரம்பிக்கும். இது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இயல்பான நிலையிலும், ஆண்குறியில் நரம்புகள் தெரிவது நல்லதல்ல. ஆண்குறி, வலிமையை இழந்துள்ளது என அர்த்தம். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, சுய இன்பம் செய்வதே ஆகும்.

அதிகப்படியான சுய இன்பம் செய்வதனால், ஆண்குறியில் நரம்புகள் தெரிய ஆரம்பிக்கின்றது. இதனால், ஆண்குறியில் உள்ள மென்மையான தசைகளும், திசுக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாகவே, ஆண்குறியில் நரம்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இவைகள் அனைத்துமே, மருத்துவமனைக்குச் செல்லாமல் தீர்வுக் காணக் கூடிய விஷயங்கள் தான். இந்தப் பிரச்சனைகளை கீழ்கண்டவைகளைப் பின்பற்றுவதன் மூலம், எளிதாக நிறுத்தலாம்.

முதலில் 108 நாட்களுக்கு சுய இன்பம் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனெனில், சுய இன்பம் செய்வதால், ஆணுறுப்பில் உள்ள நரம்புகள் தளர்வடைய ஆரம்பிக்கும்.

ஆபாசப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து ஆபாசப் படம் பார்ப்பதனால், சுய இன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாக ஆரம்பித்துவிடும். எனவே, ஆபாசப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது.

ஆணுறுப்பில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது, ஆணுறுப்பில் உள்ள தசைகள் வலுவடையும். அதையும் மென்மையாகவேச் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும். அவ்வாறு குளிக்கும் பொழுது, உடலில் உள்ள உஷ்ணம் குறையும்.

அசைவ உணவுகளை, 108 நாட்கள் உண்ணாமல் இருக்கவும். அசைவ உணவுகளை உண்ணும் பொழுது, உடலில் கிளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே, அசைவ உணவுகளை தவிர்த்தல் நலம். முடிந்த வரை, காராமணி, மொச்சைப் பயிறு, தட்டாம் பயிறு, பச்சைப் பயிறு, பாசிப் பயிறு, கொள்ளு, முதலியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அத்திப் பழச்சாறு, பைனாப்பிள் முதலியவைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தினமும், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், அடி வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும். பின்னர், அப்பகுயில் இருந்து, ஆணறுப்பிற்குச் செல்ல வேண்டிய இரத்தம் சீராக செல்லும். இதனால், ஆண்குறியில் உள்ள நரம்புகள் வலிமையடைய ஆரம்பிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், ஆண்குறியில் நரம்புகள் தோன்றுவதைத் தடுக்க இயலும். மேலும், வெளியில் தெரியும் நரம்புகளை பழைய நிலைக்குக் கொண்டு செல்ல இயலும்.

HOT NEWS