20 சிக்சர் 158 ரன்கள்! விஸ்வரூபம் காட்டிய ஹர்த்திக் பாண்டியா!

07 March 2020 அரசியல்
hardikpandya158.jpg

டிஒய் பட்டீல் டி20 போட்டியில், தன்னுடைய விஸ்வரூப ஆட்டத்தினை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹர்த்திக் பாண்ட்யா வெளிப்படுத்தி உள்ளார்.

முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகின்றார் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்த்திக் பாண்ட்யா. இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்கின்ற முனைப்பில், தற்பொழுது தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், டிஒய் பட்டீல் டி20 தொடரில் இறங்கி விளையாடி வருகின்றார். இதில், ரிலையன்ஸ்-1 அணிக்காக ஹர்த்திக் பாண்ட்யா விளையாடி வருகின்றார். அந்த அணியானது, பிபிசிஎல் அணிக்கு எதிராக விளையாடியது. அப்பொழுது, 55 பந்துகளைச் சந்தித்த அவர், கடைசிவரை ஆட்டமிழக்காமல், 158 ரன்கள் அடித்து அசத்தினார். 11 ஒன்றுகள், ஆறு பவுண்டரி, 20 சிக்சர் என தனக்கு வீசப்பட்ட பந்துகளை துவம்சம் செய்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தினால், தற்பொழுது இந்திய அணி ரசிகர்கள் மட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகவும் வீக்காக உள்ள நிலையில், ஹர்த்திக் பாண்ட்யா இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பானது மிகவும், பிரகாசமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

HOT NEWS