வீரர்கள் வெளியேறியது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவா?

04 September 2020 விளையாட்டு
harbhajansinghexit.jpg

ஐபிஎல் போட்டியானது, வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளனர்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்க வேண்டியிருந்த ஐபிஎல் போட்டியானது, கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தள்ளிக் கொண்டே போனது. இதனை முன்னிட்டு, ஐபிஎல் நிர்வாகம் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியினை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. அங்கு தற்பொழுது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்கள், பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், குடும்ப மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக, சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல், தற்பொழுது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் அணியில் இருந்து விலகியுள்ளார். இவ்வாறு இரண்டு முக்கிய வீரர்கள் இந்த ஆண்டிற்கானப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால், சென்னை அணிக்கு இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

ஐபிஎல் போட்டிகளில், தன்னுடைய சிறப்பான பங்களிப்பினை ரெய்னா கொடுத்து வந்து இருக்கின்றார். அவர் இல்லாதக் குறையினை, எவ்வாறு சென்னை அணி சரி செய்யும் என, ரசிகர்கள் கவலையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

HOT NEWS