கொரில்லா திரைவிமர்சனம்

14 July 2019 சினிமா
gorilla.jpg

பெயரளவுக்கு ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும், அது தான் கொரில்லா. படத்தில் பேசும் அளவிற்கு எதுவும் இல்லை. சரி, கொரில்லா வகை குரங்கு நடித்துள்ளதே, படம் நல்லா இருக்குமோ என, தவறாக நினைத்துவிட வேண்டாம். அந்தக் குரங்குமே, இப்படத்திற்குத் தேவையில்லை. அந்த அளவிற்கு மிக மொக்கையாக, அதனைப் பயன்படுத்தி உள்ளனர்.

நடிகர் ஜீவா நடித்துள்ள, மற்றொரு சொதப்பல் திரைப்படம் இந்தக் கொரில்லா. படத்தில் பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லை. படத்தில் கதாநாயகனாக வரும் ஜீவா ஒரு 420. பலரையும் ஏமாற்றி சம்பாதிப்பவர். அவருக்கு சதீஷூம், விவேக் பிரச்சனாவும் நண்பர்கள். சதிஷ் பேசினாலே நமக்குத் தலைவலி வரும், இதில் இவர் காமெடி வேறு செய்கிறார். உண்மையில் இவர் காமெடி செய்கிறாரா, இல்லை நம்மை எரிச்சல் செய்கிறாரா என, நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் செய்கிறார்.

ஜீவா அவ்வளவு உழைத்தாலும், கதை சொதப்பலாக இருப்பது படத்தின் மாபெரும் பின்னடைவு தான். ஒரு படம் கமர்சியலா ஹிட் ஆகனும்னா, கண்டிப்பா இரண்டு பாடலாவது நல்லா இருக்கணும். திரைக்கதை நல்லா இருக்கணும். அட்லீஸ்ட் காமெடியாவது நல்லா இருக்கணும். இந்தப் படத்தில் எதுவும் இல்லை.

சும்மா, உங்களுக்கு என்னத் தோனுதோ, அதைப் பேசுங்கள். என்னத் தெரியுமோ அதை செய்யுங்கள் என, இயக்குநர் கூறிவிட்டார் போல. படத்தில் ஒரு கச்சிதம் இல்லை. நண்பர்கள் மூவரும் சேர்ந்து வங்கிக்குச் சென்று கொள்ளை அடிக்க முயல்கின்றனர். திடீரென்று, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், வங்கிக்குள் இருப்பவர்களை விடுவிப்போம் என மிரட்டுகின்றனர். இவர்கள் ஜெயித்தார்களா, இல்லையா என்பது தான் மீதிக் கதை.

இது ஒரு கதையா என நீங்கள் கேட்கலாம். ஆனால், இதையும் ஒரு கதை என நம்பி, ஜீவா ஏன் கால்ஷீட் கொடுத்தார் எனத் தெரியவில்லை. சமீபகாலமாக விவசாயிகளின் பிரச்சனையைப் பயன்படுத்தி, விவசாயிகளை விட சினிமாத்துறையினரே அதிகம் சம்பாதிக்கின்றனர்.

படத்திற்கு சாம் சிஎஸ் தான் இசையமைத்திருக்கிறார் என்பதை, படத்தில் பெயர் வரும் பொழுது பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். மற்றபடி, அவர் இதில் என்ன செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை. ஒரு பாடலும் கேட்கும் விதத்தில் இல்லை. ஜீவா போன்ற நடிகருக்கு பாடல் போட்ட எப்படி போட வேண்டும். அவர் நல்ல நடனம் ஆடுபவரும் கூட. அடுத்த படத்தில் அவருக்கு இசையமைப்பவர்கள், அவர் நல்ல ஆடும் விதத்தில் இசையமைத்தால், ஜீவாவின் ரசிகர்களுக்கு நிம்மதியாக இருக்கும். பின்னணி இசையும் இல்லை, பாடலும் நன்றாக இல்லை. இந்தப் படத்தை ஜீவாவிற்காக வேண்டும் என்றால், ஒரு முறைப் பார்க்கலாம். அவ்வளவுதான்.

ரேட்டிங் 2/5

HOT NEWS