உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் மற்றொரு தங்கம்! இந்திய வீராங்கணை அசத்தல்!

02 September 2019 விளையாட்டு
Yashaswini

pic credit:twitter.com/indiaallsports

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கணை யாஷ் அஸ்வினி சிங் தேஜஸ்வால் தங்கம் வென்று அசத்தினார். அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்று பெருமைத் தேடித் தந்துள்ளார்.

நேற்று முன் தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் பங்குபெற்ற அவர், 236.7 புள்ளிகள் பெற்றார். 22 வயதான யாஷ் அஸ்வினி சிங் தேஜஸ்வால், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், அவருடன் போட்டியிட்டப் பலரும் இவரைப் பெரும் போட்டியாளர்கள். அவர்கள், ஏற்கனவே, ஒலிம்பிக் உட்பட பலப் போட்டிகளில், தங்கம் முதலான பதக்கத்தினை வென்றவர்கள்.

அவர்களை நம் இந்தியப் பெண், வென்று தங்கப் பதக்கத்தினைத் தேடித் தந்துள்ளார். அபிஷேக் ஷர்மா, இனவேனில் மற்றும் யாஷ் அஸ்வினி சிங் தேஜஸ்வால் ஆகியோர் இந்தத் துப்பாக்கி சுடும் போட்டியில், பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

HOT NEWS