பிரதமரை அழைத்துள்ள கங்குலி! எதற்கு தெரியுமா?

23 October 2019 விளையாட்டு
souravganguly1.jpg

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், தற்பொழுது, வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினாவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார்.

அதில், இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது. நவம்பர் 22ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கு, நீங்கள் வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதனை, வங்க தேச பிரதமரும் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹஸினா இரண்டாவது டெஸ்ட் போட்டியினை காண இந்தியா வந்தார் என்றால், கண்டிப்பாக அவரை வரவேற்க பிரதமர் மோடியும், டெஸ்ட் போட்டியின் முதல் நாள் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போட்டியானது, கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால், மேற்கு வங்க மாநில முதல்வர் செல்வி. மம்மதா பேனர்ஜியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே போல், இந்தப் போட்டியினைக் காண வங்க தேச கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் வர வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளாராம் கங்குலி.

Source:sports.ndtv.com/cricket/sourav-ganguly-says-bangladesh-prime-minister-has-confirmed-presence-for-eden-test-2120460

HOT NEWS