கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை! கங்குலி நலமுடன் உள்ளார்!

29 January 2021 விளையாட்டு
souravganguly1.jpg

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது.

கடந்த வாரம், சௌரவ் கங்குலிக்கு மருத்துவமனையில் இருதய வால்வு அடைப்பு நீக்கம் நடைபெற்றது. கடந்த வாரம் மூன்று வால்வுகளில் இருந்து வந்த அடைப்புகளில், ஒரு அடைப்பானது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் நன்றாக இருந்ததன் காரணமாக வீடு திரும்பினார். இந்த சூழலில், அவருக்கு நேற்று திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

அதன் காரணமாக, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய இருதயத்தில் இருந்து வந்த 2 அடைப்புகளை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதில், இரண்டு ஸ்டன்ட்கள் இருதயத்தில் பொருத்தப்பட்டு சிகிச்சை முடிந்தது. அவரை சந்திக்க முதல்வர் மம்மதா பேனர்ஜி, மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, கங்குலியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதில், கங்குலி தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு இருந்து வந்தப் பிரச்சனைகள் நீங்கி, உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். தற்பொழுது சுய நினைவுடன் இருப்பதாகவும், நன்றாக பேசுவதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால், கங்குலியின் ரசிகர்கள் தற்பொழுது ஆறுதல் அடைந்துள்ளனர்.

HOT NEWS