இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இத சாப்டுங்க!

10 March 2019 உடல்நலம்
carrot.jpg

உலகிலுள்ள அனைவருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ண உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்களால் நினைத்த மாதிரி இருக்க முடிவதில்லை. பலக் காரணங்களை நாம் கூறினாலும், சரியான உணவை நாம் எடுத்துக் கொள்வதில்லை என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

நாம் அனைவருமே, மூன்று வேலை உணவு உண்கிறோம் எனக் கூறிக் கொண்டாலும், யாராலும் சத்தான உணவை உண்கிறோம் எனக் கூற இயலாது. சரியான உணவை நாம் எடுத்துக் கொண்டால் நம்மால் நீண்ட நாட்களுக்கு நம்முடைய இளமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இளமை

இளமை என்பதுப் பொதுவாக எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் வேகமாகச் செய்வது மட்டுமின்றி, அழகான தேகத்தையும் குறிக்கும். இந்த அழகான தேகத்தைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. சரியான உடற்ப்பயிற்சி, அளவான தூக்கம், சத்தான உணவு இவை மூன்றும் மிக முக்கியமான ஒன்று.

நம்முடைய புற அழகை வைத்தே முதலில் மக்கள் நம்மிடம் பலகுவதற்கு நெருங்குவார்கள். இந்தப் புற அழகைப் பின்வரும் எளிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்மால் நிச்சயமாகப் பேணிப் பாதுகாக்க முடியும்.

இனிப்பு வகைகள்

இனிப்பை விரும்பாதவர்கள் இவ்வுலகில் இல்லை. இது நமக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இனிப்பு வகைகளை நாம் உண்ணும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும்.

இது நம் அழகைக் காக்க பயன்படும் முக்கிய உதவும் ஒரு உணவு ஆகும். பெரும்பாலும், கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளில் சுவைக்காக பல கெமிக்கல்களைச் சேர்ப்பர். எனவே, வீட்டில் செய்த இனிப்பு வகைகள் மிக நம்பகமானது.

கேரட்

கேரட் என்றாலே நமக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வருவது கண்களே. இதனை சாப்பிடுவதன் மூலம் நம் கண்களை மிக அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க முடியும். கேரட்டில் அதிகளவில் வைட்டமின்-A காணப்படுகிறது. இது சருமத்தின் பொலிவிற்கும், கண்களின் அழகிற்கும் உதவுகிறது. மேலும், இது விலைக் குறைந்த உணவுப் பொருள். இதனைப் பச்சையாகு சமைக்காமல் சாப்பிடுவது மிகவும் நன்று.

எலுமிச்சை/ஆரஞ்சு/சாத்துக்குடி

இந்த பழங்களில் நிறைய சிட்ரஸ் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைச் சரியாக வைக்கவும் உதவும். இந்தப் பழங்களின் சாற்றை முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகத்தில் உள்ளப் பருக்களை மிக எளிதாகவும் விரைவாகவும் அகற்ற முடியும். எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தலை முடியில் உள்ள பொடுகுகளை எளிதாக இயற்கை முறையில் நீக்க முடியும்.

பூண்டு

இதனை உண்பதன் மூலம் நாம் வாயுத் தொல்லையிலிருந்து விரைவான நிவாரணம் பெற இயலும். இதனை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலிலிருந்து விடுதலைப் பெறலாம். பூண்டை உண்பதன் மூலம், நம்மைக் கேன்சரிலிருந்து நம்மால் பாதுகாக்க இயலும். இது இரத்ததை சுத்தம் செய்வதால் நம் தோலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடுகிறது. இதனால், உடல் பொலிவுடன் இருக்கும்.

தக்காளி

தக்காளிச் சாற்றை முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகப் பொலிவைப் பெறலாம். மேலும், தக்காளியில் பல நன்மைகள் உள்ளதால் இதைப் பற்றித் தனியாக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மீன்

இதன் எண்ணெய் உடலிற்கு வலுவை அளிக்கும். இறைச்சி வகைகளில் மீன் மிகச் சிறந்த ஒன்று. இதனை உண்பதால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

HOT NEWS