கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

14 April 2020 உடல்நலம்
pregnantwoman.jpg

பெண்கள் பிரசவத்தின் பொழுது என்ன உண்ண வேண்டும், என்ன உண்ணக் கூடாது என வெகுவாகக் குழம்புகின்றனர். கீழ்காணும் உணவுகளை உண்டாலே, ஆரோக்கியமாக பிரசவம் நடைபெறும். ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்.

பால் உணவுகள்

பால் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடலின் சக்தியினை அதிகரிக்கும். மேலும், இதனால், உடலில் உள்ள பால் சுரக்கும் திசுக்களும் வெகுவாக வலிமையடையும்.

கிழங்குகள்

உருளைக் கிழங்கு உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலில் மாவுச் சத்தினை அதிகரிக்க இயலும். சாதாரணமாக உணவு உண்பதற்கும், வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது உண்பதற்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒரு பெண், இரண்டு உயிர்களுக்காக உணவு உண்ண வேண்டும். அதனை கருத்தில் கொண்டு இதனை நன்றாக அவித்து உண்பது நல்லது.

மீன்கள்

மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிக்கன், நண்டு முதலியவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, மீன்களை அதிகளவில் சேர்த்துக் கொள்வது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களுக்கு நல்லது.

முட்டை

முட்டையில் இல்லாத சத்தே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. பொறித்த முட்டைகளைத் தவிர்த்து, அவித்த முட்டைகளை உண்பது நல்லது.

கீரை வகைகள்

எந்த அளவிற்கு கீரைகளை உணவில் எடுத்துக் கொள்கின்றோமோ, அந்த அளவிற்கு உடலுக்கு வலிமை உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் கீரைகளை அவித்து, வேக வைத்து உண்பது நல்லது. கீரைகளுடன், பச்சைக் காய்கறிகளை உண்பதும் மிகச் சிறந்தது.

பழங்கள்

தக்காளியினை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். பைனாப்பிள் சூஸ் மற்றும் பப்பாளி சூஸ் முதலியவைகளை அறவேத் தவிர்க்க வேண்டும். அதே போல், இந்தப் பழங்களையும் தவிர்ப்பது நல்லது. மாதுளை, வாழை, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை அதிகளவ்வு எடுத்துக் கொள்வது நல்லது.

உலர் பழங்கள்

உலர் திராட்சை, உலர்ந்த அத்திப்பழம் போன்ற உலர்ந்த பழங்களை உண்பது உடலின் வலிமையை கூட்டும். குழந்தைகளின் உடலில், எலும்பு வளர்ச்சியினை அதிகப்படுத்தும். இதனால், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.

நீர்

எந்த அளவிற்கு நீர் பருகுகின்றீர்களோ, அந்த அளவிற்கு, கர்ப்பிணி பெண்களுக்கும், வளரும் சிசுவிற்கும் மிகவும் நல்லது. தண்ணீரை அதிகமாக குடிக்கும் பொழுது, குழந்தையின் உடலில் ஏற்படும் சூடும், கர்ப்பிணி பெண்ணின் உடலில் ஏற்படும் சூடும் குறையும்.

HOT NEWS