பேஸ்புக் பணத்தினை கைகழுவும் பெரும் நிறுவனங்கள்! சிக்கலில் பேஸ்புக்!

12 October 2019 தொழில்நுட்பம்
libracryptocurrency.jpg

பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது, லிப்ரா எனும் புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்குத் தற்பொழுது, பல பெரிய பணப்பரிமாற்ற நிறுவனங்கள், தங்களுடைய ஆதரவினை வாபஸ் வாங்கி உள்ளனர்.

பேஸ்புக் நிறுவனம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில், லிப்ரா எனும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இது பிட்காயினுக்கு, மாற்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் அளவிற்கு, பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அதனை பேஸ்புக் விளம்பரம், பேஸ்புக் வியாபாரத்திற்குப் பயன்படுத்தும் பொழுது, சலுகைகள் வழங்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் கூறியது. இதனால், பலரும் இதில் முதலீடு செய்ய விரும்பினர். மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால், ஈபே உட்பட உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதரவும், ஆர்வமும் காட்டினர்.

இதனால், கிரிப்டோகரன்சி உலகத்தில் புதிய புரட்சியே ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் அனைத்துமே, தங்களுடைய ஆதரவினை விலக்கிக் கொண்டுள்ளன. இதற்கு சரியான தகவலை வெளியிடாவிட்டாலும், இவைகளைப் பயன்படுத்தி, பணப்பரிமாற்றம் செய்யவோ அல்லது வாங்கவோ இயலாது. இது தற்பொழுது, பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான சிக்கலை உருவாக்கி உள்ளது.

இந்த ப்ராஜெக்டில், பல கோடிகளை முதலீடு செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இப்படி, நிதி மேலாண்மை மற்றும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள், பின் வாங்கியுள்ளதால், இந்தப் ப்ராஜெக்ட் வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

HOT NEWS