இங்கிலாந்து வெற்றி! ஸ்டோக்ஸ் தொடர் நாயகன்! ஆஷஸ் போட்டி நிறைவு!

16 September 2019 விளையாட்டு
ashesfinal.jpg

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தினைப் பேட்டிங் செய்ய கூறியது. இதனால், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 87.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 294 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் மார்ஷ் 5 விக்கெட்டுகளையும், கும்மின்ஸ் 3விக்கெட்டுகளையும், ஹாசல்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 225 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், குர்ரான் 3 விக்கெட்டுகளையும், ஓக்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டென்லி அதிகபட்சமாக, 94 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் லயன் 4 விக்கெட்டுகளையும், கும்மின்ஸ், சிடில் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 263 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் பிராட் மற்றும் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ரூட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

தொடர் 2-2 என்ற கணக்கில், சமனில் முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் இந்தத் தொடரின், நாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும், சென்ற கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதால், இந்தக் கோப்பையும் ஆஸ்திரேலியா அணிக்கே, வழங்கப்பட்டது.

HOT NEWS