இங்கிலாந்து வெற்றி! தொடரைக் கைப்பற்றியது!

29 July 2020 விளையாட்டு
engvswi2nd.jpg

வெ.இண்டீஸிற்கு எதிரான மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதால், அந்த தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள வெ.இண்டீஸ் அணியானது, மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட்ல், வெ.இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட்ல் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியானது, ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து, 111.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 369 ரன்களை குவித்தது. அந்த அணியின் போப் 91 ரன்களையும், பட்லர் 67 ரன்களையும், பிராட் 62 ரன்களையும் குவித்தனர். வெ.இண்டீஸ் அணியின் சார்பில், ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல் மற்றும் சேஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய வெ.இண்டீஸ் அணியானது, 65 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 197 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 46 ரன்களும், டவ்ரிச் 37 ரன்களும், ஜான் கேம்பெல் 32 ரன்களும் குவித்தனர். பிராட் 6 விக்கெட்டுகளும், ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தன்னுடைய 2வது இன்னிங்சில் 58 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 226 ரன்களை இங்கிலாந்து அணிக் குவித்தது.

அந்த அணியின் பர்ன்ஸ் 90 ரன்களும், ரூட் 68 ரன்களும், சிப்லே 56 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வெ.இண்டீஸ் அணியானது, 37.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 129 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஹோப் 31 ரன்களும், பிளாக்வுட் 23 ரன்களும், ப்ரூக்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் சார்பில், வோக்ஸ் 5 விக்கெட்டுகளும், பிராட் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால், மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், 2-1 என்றக் கணக்கில், இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. சேஸ் மற்றும் பிராட் தொடர் நாயகன் விருதினையும், பிராட் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றனர்.

HOT NEWS