பிரேசில் போட்டியில் தமிழக வீராங்கணை தங்கம் வென்றார்!

29 August 2019 விளையாட்டு
elavenilvalarivan.jpg

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில், தமிழக வீராங்கணை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.

உலகில் உள்ள துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் நாடுகள் சார்பில், பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அந்த வரிசையில் நடைபெற்ற பத்து மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்த கடலூரைச் சேர்ந்த, இளவேனில் வளரிவான் வெற்றிப் பெற்றார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS