சிறு நாடுகள் பணம் சம்பாதிக்கின்ற விசித்திரமான முறைகள்

10 March 2019 தொழில்நுட்பம்
tuvalu.jpg

நாம் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இருந்தாலும் தற்போதையப் பொருளாதார சூழ்நிலையில் நம் நாட்டை வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர். இருப்பினும் நாம் இன்னும் வளர வேண்டியுள்ளதை நாமும் நம் அரசாங்கமும் நன்கு அறிவோம். நம் நாட்டிற்குப் பல வழிகளில் பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகில் சிறிய நாடுகள் கிட்டத்தட்ட 100க்கும் மேல் உள்ளன. அவை, மக்களை அதிகமாக கஷ்டப்படுத்தாமல் மிக எளிதாகவும் அதே சமயம் நம்பமுடியாத வகையிலும் பணம் சம்பாதிக்கின்றன. அவற்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

1. செயின்ட் கிட்ஸ் அன்ட் நீவிஸ் [st kitts & nevis]

இந்நாட்டில் 50,000க்கிற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர். இவர்களிடம் வசூலாகும் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது. எனவே, இந்நாட்டு அரசாங்கம் பணம் சம்பாதிப்பதற்காக பாஸ்போர்ட்களை விற்கிறது. இது யாருக்கும் தெரியாத விஷயம் ஆகும். ஒரு வேளை இதைப் பற்றி விஜய் மல்லையாவுக்குத் தெரிந்திருந்தால் இந்நேரம் கரீபியக் கடற்கரையில் உல்லாசமாக இருந்திருப்பார்.

2. நியூஹேய் (NEWHEY)

இது பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1109 பேர் மட்டுமே இருக்கின்றனர். குட்டித் தீவாக காட்சியளிக்கும் இது மிக அழகிய மற்றும் அமைதியான நாடாகும். இந்நாட்டு அரசாங்கம் தன்னுடைய நாட்டிலிருந்து உலகத்திற்கே பாதுகாப்பான தொலைபேசி சேவையை வழங்குகிறது. இதைப் பயன்படுத்திப் பல சட்டவிரோதக் காரியங்களை நாம் செய்ய இயலும். மேலும், ஆபாச போன் கால்களை இந்நாட்டு அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இதிலிருந்த கணிசமான வருவாய் வருவதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

3. டுவாலூ (TUVALU)

இந்நாடு, இல்லை இந்தக் குட்டித் தீவானது பசிபிக் பெருங்கடலில் அழகாக அமைந்துள்ளது. இந்நாட்டின் முக்கிய வருவாயே ஆன்லைன் சேல்ஸ்தான். இந்நாட்டில் சுமார் 11,000 பேர் வசிக்கின்றனர். காலத்திற்கேற்ப தன்நாட்டை மாற்றிக் கொண்ட இந்நாடு ஆன்லைன் உலகில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காலூன்ற ஆரம்பித்துவிட்டது.

4. எரிட்ரியா (ERITREA)

இது உலகிலேயே மிக மோசமான சர்வாதிகார நாடாக உள்ளது. இந்நாட்டில் குடியேறினால் இரண்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். காரணம் இந்நாட்டில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் உள்ளனர். இதைப் பற்றி நமக்கு முன்னரேத் தெரியும். ஆனால், அந்நாட்டில் உள்ள அனைவரும் தான் சம்பாதிக்கும் பணத்தில் 2% சதவீதத்தை அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்கொடையாக ஒவ்வொரு வருடமும் வழங்க வேண்டும்.

5. நாரூ (NAURU)

இதுவே உலகின் மிகச் சிறிய குடியரசு நாடாகும். இந்நாடு பணம் சம்பாதிப்பதற்காக போன் விபச்சாரம், பாஸ்போர்ட் விற்பனை மற்றம் இசைத் துறையின் மூலம் அதிகப் பணத்தை சம்பாதிக்கின்றது.

HOT NEWS