துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

16 January 2021 அரசியல்
duraimurugandmk121.jpg

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் துரைமுருகன். தொடர்ந்து கட்சிக் கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசி வருகின்ற அவர், அவ்வப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளதால், தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்து, விரைவில் அந்த மருத்துவமனையானது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திமுகவினர் அந்த மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர்.

HOT NEWS