ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டிரீம் 11 ஸ்பான்சர்ஷிப்பினை கைப்பற்றியதாக தகவல்!

18 August 2020 விளையாட்டு
dream11.jpg

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பினை, டிரீம் 11 நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற மோதல் காரணமாக, ஐபிஎல் போட்டியினை விவோ நிறுவனம் ஸ்பான்சர் செய்ய, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இது பற்றி ஐபிஎல் நிர்வாகக் குழுவினர், தீவிரமாக ஆலோசனை செய்தனர். இதனையடுத்து, விவோ நிறுவனத்தினை ஐபிஎல் ஸ்பான்சர்சிப்பில் இருந்து பிசிசிஐ நிர்வாகம் நீக்கியது.

இனி, இந்த ஆண்டிற்கான தற்காலிக ஐபிஎல் ஸ்பான்சர்சிப்பிற்கான டென்டரையும், ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த ஆண்டு இறுதி வரையிலான ஒப்பந்தமானது வரவேற்கப்படுவதாக கூறியது. இதற்கு பதஞ்சலி உள்ளிட்டப் பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இந்த ஒப்பந்தமானது, தற்பொழுது ஒரு முடிவிற்கு வந்துள்ளது. அதன்படி, ஆன்லைன் பெட்டிங் நிறுவனமான டிரீம் 11 நிறுவனம் இந்த ஒப்பந்தத்தினைக் கைப்பற்றி உள்ளது.

சுமார் 222 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தினை, இந்த நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் டைட்டில் ஸ்பான்சர்சிப்பானது, தற்பொழுது உறுதியாகி உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS