அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்புக்கு கொரோனா! தேர்தல் சமயத்தில் சிக்கல்!

02 October 2020 அரசியல்
donaldtrumpvisit.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், அவருடைய மனைவி மெலானியா ட்ரம்பிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 லட்சம் பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் முதல் உலகின் பல முன்னணி தலைவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் தற்பொழுது தேர்தல் கலைக் கட்டி உள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், மெலானியா ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், அவருடைய மனைவி மெலானியா ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு உள்ளனர். வெள்ளை மாளிகை முழுவதும் தற்பொழுது தூய்மைப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகின்றது.

HOT NEWS