தனுஷை எச்சரிக்கும் விசு! மூன்று முகம் படம் குறித்து வீடியோ!

18 February 2020 சினிமா
visu.jpg

என்னைப் பற்றி, உங்களுடைய மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, இயக்குநரும் நடிகருமான விசு அதிரடி வீடியோவினை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் தனுஷ் தன்னுடைய மாமானரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, நெற்றிக்கண் படத்தில் நடிப்பது தான், தன்னுடைய நீண்ட கால விருப்பம் என தெரிவித்து வருகின்றார். இந்நிலையில், அப்படத்தின் பணிகள் தற்பொழுது தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து, தன்னுடைய யூடியூப் சேனல் மூலம், வீடியோ ஒன்றில் பேசியிருக்கின்றார் விசு. அவர் பேசுகையில், கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம் தான், இந்தப் படத்தினை தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தினை இயக்கி இருந்தார். தனுஷ் இந்தப் படத்தினை ரீமேக் செய்ய விரும்புவதாக கேள்விப்பட்டேன். அதற்கான வேலைகளும் தொடங்கி விட்டதாக, தகவல்கள் கசிந்து வருகின்றன. அது பொய் எனும்பட்சத்தில், அது பற்றிக் கவலையில்லை. ஒரு வேளை உண்மையென்றால், கண்டிப்பாக அப்படத்தின் கதாசிரியரான என்னிடம் தான் உரிமம் பெற வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணா நீ மூக்கப் பிடி, நீ வாயப் பிடி, குறட்ட எதிலிருந்து வருதுன்னு பார்ப்போம்.

HOT NEWS