தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாஜகவில் இணைந்தார்!

03 February 2020 சினிமா
perarasujointsbjp.jpg

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களுள் ஒருவரான பேரரசு, தற்பொழுது பாஜகவில் இணைந்தார்.

சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி, பழனி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் பேரரசு. நடிகர் விஜய்க்கு பிடித்த, நல்ல இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான, கமலாலயத்திற்கு வந்தார். அங்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பாஜகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இதற்கான, உறுப்பினர் அடையாள அட்டையினை பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர், பேசிய பேரரசு மோடியின் செயல்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பிரதமரின் பணி என்னை வியக்க வைக்கின்றது எனவும், அதனால் தான் பாஜகவில் இணைந்ததாகவும், பேரரசு பேட்டியளித்துள்ளார்.

HOT NEWS