வீடு, பிளாட், வில்லா, பங்களா, ஒரு விரிவான விளக்கம்!

27 April 2020 அரசியல்
villa.jpg

அனைத்து சாதாரண மனிதனின் அத்தியாவசியக் கனவாக இருப்பது, தன்னுடைய குடும்பத்திற்கென்று ஒரு வீடு. சொந்த வீடு அவ்வளவு தான். ஆனால், அதில் எத்தனை வகைகள் உள்ளன என்று யாருக்கும் தெரிவது கிடையாது.

பொதுவாக நாம் தங்கும் வீட்டினை, அப்பார்ட்மெண்ட், ப்ளாட், வீடு, வில்லா, பங்களா எனப் பிரிப்பர். இன்னும், பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருப்பவர்கள், சொந்தமாக அரண்மனைகளைக் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வித்தியாசங்கள் அதிகமாகவே உள்ளன.

வீடு

வீடு என்பது தனித்துவமான ஒன்று. அதில், பலர் வசிக்கலாம். அனைத்து வசதிகளும் அதில் இருக்கும். எந்தக் கட்டிடத்திலும் துணையாக இல்லாமல், தனியாக உருவாக்கப்படுகின்றன. இதில், விஷேசமான விஷயம் என்னவென்றால், நம் வீட்டில் நாம் என்ன செய்தாலும், அது பிறரைப் பாதிக்காது. உதாரணம், நாம் நம்முடைய வீட்டில் ஹோம் தியேட்டர் வைத்து சப்தமாக பாட்டுக் கேட்கலாம்.

யாருக்கும் கேள்விக் கேட்கும் உரிமைக் கிடையாது. ஆனால், அபார்ட்மெண்ட் அப்படி அல்ல. வீடுகளுக்கு தனி வாசல் உண்டு. வீட்டில் தரைதளத்தில் நாம் வசிக்க இயலும். வீட்டினை தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யவும் இயலும்.

பிளாட்

ஒரு அப்பார்ட்மெண்ட்டில் பல பிளாட்டுகள் இருக்கும். அதில், ஒன்றினை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்வு செய்யும் பிளாட் நம்முடைய சொந்தக் குடியிருப்பாக மாறும். அதற்கானப் பணத்தினை நாம் செலுத்த வேண்டும். அந்த அப்பார்ட்மெண்டிற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தினை, நாம் பராமரிப்பிற்காக வழங்க வேண்டும். இதில், பல சிக்கல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு, நாம் நம்முடைய பிளாட்டில் ஹோம் தியேட்டரில் சப்தமாக பாட்டுக் கேட்டால், அக்கம்பக்கத்து பிளாட் மக்கள், நம்மிடம் வந்து சண்டையிடும் வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய அறையில் ஆணி அடித்தால் கூட, அவர்கள் சண்டையிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பல பிளாட்கள் இருக்கும் ஒரு கட்டிடமே, அபார்ட்மெண்ட் ஆகும்.

பெரும்பாலான பிளாட்கள் மாடிகளில் தான் உருவாக்கப்படுகின்றன. தரைதளமானது, கார்பார்க்கிங் உள்ளிடவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாட்களை விரிவாக்கம் செய்ய இயலாது.

வில்லா

வில்லா என்பது, சொகுசாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட வீடு என்றுக் கூறலாம். இதுவும் தரை தளம், உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளையும் கொண்டது. இதன் வாசலானது, நேராக ரோட்டில் இருந்து ஆரம்பிக்கும். பெரும்பாலான வில்லாக்களில், தோட்டங்கள் உள்ளிட்டவை இருக்கும். வில்லாக்களில் கிச்சன் உள்ளிட்டவைகள், மிக நேர்த்தியாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.

பங்களா

ஆடம்பரப் பிரியர்களுக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் உருவாக்கப்படுவது தான் பங்களா. இது மிகவும் செலவுமிக்கது. பங்களாவில் இல்லாத வசதிகளே இருக்காது. ஒன்றுக்கு இரண்டு சமையலறைகள், பல படுக்கையறைகள், நீச்சல் குளம், வீட்டிற்குள்ளேயே தியேட்டர், வீட்டிற்குள்ளேயே பார் உள்ளிட்ட அனைத்து வசதிகளுமே இருக்கும். பெரும் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பங்களாக்களிலேயே வசிக்கின்றனர்.

HOT NEWS