நீங்கள் சொன்னதையும் செய்ததையும் மக்கள் மறந்துவிடுவார்கள்! தோனியின் மனைவி!

16 August 2020 விளையாட்டு
sakshidhoni.jpg

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி ஓய்வினை அறிவித்தார்.

16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி, பல்வேறு சாதனைகளைப் புரிந்த மகேந்திர சிங் தோனி, தற்பொழுது ஓய்வினை அறிவித்து உள்ளார். அதற்குப் பலரும் தங்களுடைய நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் ஓய்வு குறித்து இதயப்பூர்வமாக சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், நீங்கள் செய்துள்ள சாதனைகள் குறித்து, பெருமைப்பட வேண்டும். விளையாட்டிற்கு உங்களுடைய சிறந்த தரமான பங்களிபினை வழங்கி உள்ளீர்கள். அதற்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன். நீங்கள் நேசித்த இந்த விளையாட்டில் இருந்து விலகிய பொழுது, எவ்வளவு கண்ணீரை சுமந்து இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

இன்னும் பல அற்புதமான, ஆச்சர்யமான விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளது. நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் செய்ததை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், நீங்கள் ஊட்டிய உணர்ச்சியினை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்ற மாயா ஏஞ்சலின் வரியினை மேற்கோள் காட்டி, தோனியின் மனைவி சாக்சி தன்னுடைய பதிவில் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS