தோனியை கழற்றிவிட்ட பிசிசிஐ! தோனியின் எதிர்காலம்?

16 January 2020 விளையாட்டு
dhoniretirement.jpg

பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்ட வீரர்கள் ஒப்பந்த்தப் பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் பெயர் இல்லாததால் அவர் ஓய்வு பெற உள்ளார் என, அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் வாரியம், வருடா வருடம் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதில், ஏ அணி முதல், சி பிரிவு வரை உள்ள வீரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் அதில் இடம் பெறும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில், எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இல்லை. மேலும், தினேஷ் கார்த்திக் பெயரும் இல்லை. இதனால், தோனியின் ரசிகர்கள் கடும் கவலை அடைந்துள்ளனர். தோனியினை கௌரவிக்க, ஒரு ஆட்டமாவது நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பட்டியலில் இல்லாவிட்டாலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக வீரர்கள் விளையாட முடியும். அவ்வாறு பலரும் விளையாடி உள்ளனர். இந்திய அணியின் பயிற்சியாளர் முடிவின் படி, தோனி வருகின்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS