சிஎஸ்கே அணியினை முழுமையாக மாற்ற முடிவு? வீரர்கள் மீது நிர்வாகம் அதிருப்தி!

24 October 2020 விளையாட்டு
csk2.jpg

தொடர்ந்து ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் மிக மோசமானத் தோல்விகளை சந்தித்து வருவதால், சிஎஸ்கே அணியினை முழுமையாக மாற்ற அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது வரை விளையாடியுள்ள போட்டிகளில், 2 ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் மீதும், அதன் கேப்டன் தோனியின் மீதும் பலரும் தங்களுடைய எதிர்மறையானக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து தோல்வியினைத் தழுவியதன் காரணத்தால், ப்ளே ஆப் தகுதியினை முழுமையாக இழந்தது.

இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடரிலும், ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற சிஎஸ்கே முதன் முறையாக, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் இருக்கின்றது. இதனால், அந்த அணியில் இருக்கின்ற வீரர்களை வருகின்ற 2021 ஐபிஎல் தொடரில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி தோல்விக் குறித்துப் பேசும்பொழுது, இளம் வீரர்கள் பற்றிக் கேள்விக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்து பேசிய தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் காணப்படவில்லை எனவும், அதனால் தான் மூத்த வீரர்கள் களமிறக்கப்படுகின்றார்கள் என்றுக் கூறினார். ஆனால், மும்பையுடனான ஆட்டத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால், யாரும் பெரிய அளவில் விளையாடவில்லை. பலம் குறைந்த அணிகளுடன் விளையாட அனுமதிக்காமல், பலம் வாய்ந்த மும்பை அணியுடன் இளம் வீரர்களைக் களமிறக்கி, அவர்களை அவமானப்படுத்தி உள்ளார் எனவும், ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

HOT NEWS