கிரிக்பஸ் தளத்தின் தலைசிறந்த ஐபிஎல் வீரர்கள் யார்? பட்டியல் வெளியானது!

05 April 2020 விளையாட்டு
rohitsharmami.jpg

உலகளவில் பிரசித்திப் பெற்ற கிரிக்கெட் வலைதளமான கிரிக்பஸ், தற்பொழுது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியக் கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படும் ஐபிஎல் போட்டியானது, இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, அந்தப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இதில் பங்கேற்பதால் உலகளவில் இந்த விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட 11 வீரர்களை கிரிக்பஸ் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஏழு இந்திய வீரர்களுடன், இந்தப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த அணியின் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியின், ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். டேவிட் வார்னர், ஏபிடிவில்லியர்ஸ், சுனில் நரைன் மற்றும் லசித் மலிங்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, எம்எஸ்தோனி, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

HOT NEWS