2வது சோதனையிலும் வெற்றி! கோவாக்ஸின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி!

04 November 2020 அரசியல்
covaxin.jpg

இந்தியாவின் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள கோவாக்ஸின் தடுப்பு மருந்தானது, 2வது சோதனையிலும் வெற்றி பெற்று உள்ளதால், 3வது கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், நான்கரை கோடிக்கும் அதிகமானப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இந்த வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமானது, புதியதாக கோவாக்ஸின் என்ற மருந்தினை கடந்த ஜூலை மாதம் உருவாக்கியது.

அதனை தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்க, மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து அந்த மருந்தானது தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டம் மற்றும் 2வது கட்டப் பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்து உள்ளார். 1000 பேரிடம் இந்த மருந்தானது செலுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 3வது கட்ட பரிசோதனைக்கு தற்பொழுது அனுமதி கிடைத்துள்ளதாகவும், விரைவில் இதன் முடிவும் நல்ல விதத்தில் அமையும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். எதிர்பார்த்தபடி, நல்ல விதத்தில் இந்த மருந்தானது, நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS