கொரோனா மருந்து பாதுகாப்பானது! சீரம் அமைப்பு உறுதி! பிரதமர் மோடி பாராட்டு!

04 January 2021 அரசியல்
covaxin.jpg

இந்தியாவில் தற்பொழுது கோவாக்ஸின் மற்றும் கோவிசீல்டு ஆகிய மருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி, கோவாக்ஸின் மற்றும் கோவிசீல்டு ஆகிய மருந்துகளானது மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த மருந்துகளானது, இறுதிக் கட்டப் பரிசோதனை முடிந்து தற்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை அவசர காலப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என, மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை சீரம் நிறுவனமும் உறுதிபடுத்தி உள்ளது. அதன்படி, தற்பொழுது இந்த கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு ஆகிய மருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்துகள் முதலில் முதல் நிலை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்தினை இறுதிக் கட்ட ஆய்வின் முடிவானது தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை.

இந்த மருந்தால் பெரிய அளவில், பக்க விளைவுகள் ஏற்படாமல் இருந்ததன் காரணமாகவே, இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. நிபுணர்கள் குழு வழிகாட்டுதலின் படி, இந்த ஆய்வுகள் விதிகளைப் பின்பற்றி நடைபெற்றதாகவும், இதில் நல்லப் பலன்கள் கிடைத்தக் காரணத்தாலேயே இந்த மருந்தானது, தற்பொழுது அனுமதிக்கப்பட்டு உள்ளது எனவும் சீரம் நிறுவனத்தின் சிஈஓ அடார் பூனா வல்லா தெரிவித்து உள்ளார்.

இந்த மருந்து பெரிய அளவில் நல்லதொரு பலன்களை ஏற்படுத்தும் எனவும், கொரோனாவில் இருந்து விடுதலை அளிக்கும் எனவும், பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

HOT NEWS