கொரோனா தடுப்பூசி விலை என்ன தெரியுமா? தனியாக வாங்கினால் கூடுதல் ரேட்!

07 January 2021 அரசியல்
covid19-test.jpg

இந்தியா முழுவதும் தற்பொழுது கொரோனா தடுப்பூசி விநியோகமானது, தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இருந்து, சீனாவின் ஊஹான் பகுதி முதல் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவியது. இதற்கான மருந்தானது, கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரிசோதனை செய்யப்ப்பட்டு வருகின்றது. இந்தியாவினைப் பொருத்தமட்டில், ஜூலை மாதம் தொடங்கி, கொரோனா தடுப்பூசிகளானது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது இதில் கோவீசீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பு மருந்துகளானது, மனிதர்களுக்கு பயன்படுத்தும் அளவிற்குப் பாதுகாப்பானது எனவும், அதனை விநியோகம் செய்யவும் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை குழுவானது அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது இந்தியாவின் பலப் பகுதிகளுக்கும் இந்த மருந்தானது, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு மருந்துகளுமே 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தான் வைக்க வேண்டும்.

இதன் விலையானது தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அரசிற்கு இந்த மருந்தின் ஒரு டோஸானது 440 ரூபாய்க்கு அரசாங்கத்திற்கும், 700 முதல் 800 ரூபாய்க்கு தனியார் சந்தையிலும் விற்கப்பட உள்ளதாக, சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறிவித்து உள்ளது.

HOT NEWS