ப்பியூச்சர் காண்செப்ட்ஸ்

10 March 2019 தொழில்நுட்பம்
iwatch.jpg

இதுப் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஸ்மார்ட் வாட்ச்சின் அடுத்த வெர்சனாக இருந்தாலும் இது உண்மயில் ஸ்மார்ட்வாட்ச்சை விட பன்மடங்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் தயாராகி வருகிறது. இருப்பினும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட சீனாவும், ஜப்பானுமே இதனை உருவாக்குவதில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இது மிக விரைவாக அதாவது 2020க்குள் இதனை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேண்ட்கள் கண்டிப்பாக அனைவரது கையிலும் இருக்கப் போவது உறுதியான ஒன்றாகும்.

I-WATCH

இது சாதாரண ஆலார்ம் கிளாக்கைப் போல இருந்தாலும் இது முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இது நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பும், நம்முடன் உரையாடும், தொலைபேசியாகவும் செயல்படும். முற்றிலும் ஹோலோகிராபிக் முறையில் தயாராகி வரும் இந்தக் கடிகாரம் எப்படியும் 2030ல் வெளிவந்துவிடும். ஏனெனில் ஹோலோகிராபிக் முறையானது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வருகிறது. மேலும், ஹோலோகிராபிக் முறையின் சாதக மற்றம் பாதகத்தைப் பொறுத்தே இந்தக் கடிகாரம் பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதியான ஒன்றாகும்.

HOT NEWS