என் மகன் வாழ்க்கையை முடித்துவிட்டியே! யுவராஜ் தகவல்!

28 April 2020 விளையாட்டு
yuvrajsinghsix.jpg

என் மகன் வாழ்க்கையை முடித்து விட்டாய் என, யுவராஜ் சிங்கிடம், பிராட்டின் தந்தை கூறியதாக யுவராஜ் சிங் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. அதில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கினை, இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் வம்பிழுத்தார். இதனால், இரு வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அடுத்து ஸ்டுவர்ட் பிராட் பந்து வீசினார்.

அவர் வீசிய ஆறு பந்துகளிலும், ஆறு சிக்சர்கள் அடித்து, யுவராஜ் சிங் கெத்து காட்டினார். அப்பொழுது, அவருடைய தந்தையான கிரிஸ் பிராட்டும் அந்த ஆட்டத்தில் நடுவராக இருந்தார். அந்தப் போட்டி முடிந்ததும், யுவராஜ் சிங்கினை சந்தித்து கிரிஸ் பிராட் பேசியதாக, யுவராஜ் தெரிவித்தார். இது குறித்து, யுவராஜ் பேசுகையில், என்னை ஆட்டம் முடிந்ததும் கிரிஸ் பிராட் சந்தித்தார். அப்பொழுது, ஆறு சிக்சர் அடித்து, என்னுடைய மகனின் வாழ்க்கையை முடித்து விட்டாயே, உன்னிடம் எனது மகனுக்கு ஏதாவது வேலைக் கிடைக்குமா என்று கூறினார்.

அதற்கு, நான் எனக்கு உங்கள் மகனின் வலி புரியும். ஏனெனில், இதற்கு முந்தைய ஆட்டத்தில், என்னுடைய பந்தில் ஒருவர் 5 சிக்சர் அடித்தார். எனவே, நீங்கள் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக உங்கள் மகன், மிகப் பெரிய பந்துவீச்சாளராக வருவார் என்று கூறினேன். பின்னர், என்னுடையக் கையொப்பத்துடன் ஒரு டிசர்ட்டினை அவரிடம் கொடுத்து, பிராட்டிடம் கொடுங்கள் என்றேன்.

தற்பொழுது, பிராட் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார் என, யுவராஜ் பேசினார்.

HOT NEWS