அமெரிக்கா இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்! சீனா கடுமையான எதிர்ப்பு!

16 October 2020 அரசியல்
zhaolijian.jpg

அமெரிக்கா தன்னுடைய பயிற்சிகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என, சீன கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து உள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்கனவே, கடந்த சில வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இரு நாடுகளும், ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. லடாக் பகுதி தங்களுக்குச் சொந்தம் என சீனாவும், எங்களுக்குச் சொந்தம் என இந்தியாவும் கூறி வருகின்றது. இந்த சூழ்நிலையில், சீனாவினைப் பழித் தீர்ப்பதற்காக, இந்தியாவிற்கு தன்னுடைய ஆதரவினை அமெரிக்கா தெரிவித்து வருகின்றது.

அதே போல், தைவான் தங்களுடையப் பகுதி என சீனா கூறி வருகின்றது. அதனை அச்சுறுத்தும் விதமாக, இராணுவப் பயிற்சிகளையும் செய்து வருகின்றது. இதனால், எரிச்சல் அடைந்த தைவான், அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதால், சீனாவிற்கு அதிருப்தி ஏற்பட்டது. போதாத குறைக்கு, அமெரிக்காவின் போர் கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்துள்ளன. அதனை சீனா தற்பொழுது எச்சரித்து உள்ளது.

தேவையில்லாமல், எங்கள் நாட்டு விஷயத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது எனக் கூறியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, உலக நாடுகளின் விதிப்படி, இது சர்வதேச எல்லைப் பகுதி ஆகும். இதில் பயணம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது எனக் கூறியுள்ளதால், மீண்டும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS