மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்! இந்தியா சீனா மோதல்!

03 September 2020 அரசியல்
chinaindialadakh.jpg

இந்தியாவின் நிலைகள் மீது, சீன இராணுவம் அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் மாதம் முதல் லடாக் மற்றும் லே பகுதிகளில் தொடர்ந்து, எல்லைப் பிரச்சனை நீடித்து வருகின்றது. சீன இராணுவம் தன்னுடையப் படைகளை லடாக் பகுதியில் குவித்து வருகின்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய இராணுவமும் தன்னுடையத் துருப்புக்களை அங்கு குவித்து வருகின்றது.

இரண்டு நாடுகளும் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது சீன இராணுவம் இந்திய இராணுவத் துருப்புக்களின் மீது, துப்பாக்கிச்சூட்டினை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவமும் பதிலடித் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. மேலும், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியினை ஒட்டி, தன்னுடைய துருப்புகளைக் குவிக்க, சீனா தீட்டியத் திட்டத்தினை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

HOT NEWS