சீனாவில் சோகம்! சுரங்க இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு!

23 January 2021 அரசியல்
mineaccident.jpg

சீனாவில் உள்ளத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில், மீண்டும் தொய்வு ஏற்பட்டது.

சீனாவின் கிக்ஸியா நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த ஜனவரி 10ம் தேதி அன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக, சுரங்கப் பாதையானது முழுமையாக நிலச் சரிவில் சிக்கிக் கொண்டது. அப்பொழுது அங்கு வேலை செய்தவர்களில் 22 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியானது, துரிதக் கதியில் நடைபெற்று வந்தது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேரை மீட்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவும், மருந்தும், ட்யூப் மூலமாக வழங்கி வருகின்றனர். எஞ்சியவர்களைக் காணவில்லை என்றுத் தெரிவித்து உள்ளனர். இவர்களை மீட்பதற்காக, தனியாக பாதை ஒன்றினை உருவாக்கினர். அதுவும் தற்பொழுது நிலச்சரிவால் மூடப்பட்டு உள்ளது. இதனால், சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் 15 நாட்கள் ஆகும் என மீட்புப்படையினர் தெரிவித்து உள்ளதால், சீனாவில் சோகம் ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS