இந்தியாவால் தான் பிரச்சனை! அவர்கள் தான் முதலில் சுட்டனர்! சீனா குற்றச்சாட்டு!

08 September 2020 அரசியல்
chinaindialadakh.jpg

இந்தியா தான் முதலில் சீனத் துருப்புக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீனா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், ஜூன் மாதம் தொடங்கி நாளுக்கு நாள், போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இரு நாடுகளும், தொடர்ந்துப் பலக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இதனிடையே, இரு நாட்டு இராணுவமும் தன்னுடையப் படைகளை, லடாக் மற்றும் லே பகுதிகளில் குவித்த வண்ணம் உள்ளன. சீனா தன்னுடைய ஜே 15 மற்றும் ஜே 20 போர் விமானங்களை லடாக் பகுதியில் குவித்து வருகின்றது.

மேலும், போருக்குத் தேவையான அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றது. சீனா இப்படி இருக்கின்ற நிலையில், இந்தியா தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து போர் கருவிகளை வாங்கிய வண்ணம் உள்ளது. ஏவுகணைகள், ஆயுதங்களை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களின் முதல் பிரிவினையும், அவசர அவசரமாகப் பெற்று உள்ளது. அதனை, லடாக் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த சூழ்நிலையில், சீனா இராணுவம் லடாக் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு சுட்டதாகவும், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் திருப்பிச் சுட்டதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சீனா தற்பொழுது தன்னுடையக் கருத்தினை வெளியிட்டு உள்ளது. இது குறித்து சீனா பாதுகாப்புப் படையின் மேற்கு காமண்டராக இருக்கும் ஜாங் ஜூயிலி பேசுகையில், இந்தியா தான் அத்துமீறி சீனா இராணுவத் துருப்புக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளார்.

எல்லையில் சீனா அமைதியினையே விரும்புவதாகவும், இந்தியா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலும், மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS