சீனாவில் திடீர் அவசர நிலை பிரகடனம்! மீண்டும் கொரோனா பரவல் அச்சம்!

15 January 2021 அரசியல்
coronachina20.jpg

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவியது. இதற்கு தற்பொழுது பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்காக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ்கள் இங்கிலாந்து, ஜப்பான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த வைரஸிற்கு காரணமாக அமைந்திருந்த சீனாவில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த சூழலில் திடீரென்று எதிர்பாராத விதமாக, புதிய மாறுபட்டக் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் அவசர நிலையானது பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக் கூடாது எனவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வர வேண்டும் என, சீன அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது.

இந்தப் பகுதியில் 25ற்கும் அதிகமான நபர்களிடம் புதிய மாறுபட்டக் கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டதால், இந்த முடிவினை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

HOT NEWS