மீண்டும் படைகளை குவிக்க ஆரம்பித்த சீனா! உஷாராகும் இந்தியா!

05 January 2021 அரசியல்
chinagalwan.jpg

லடாக் பகுதியில் சில வாரங்களாக அமைதி நிலவி வந்த சூழலில், தற்பொழுது மீண்டும் சீன இராணுவம் தங்களுடையப் படைகளை குவிக்கத் துவங்கி உள்ளது.

லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பரிதாமாக சீன வீரர்களால் கொல்லப்பட்டனர். இதனால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படைகளை, லடாக் பகுதியில் குவிக்கத் துவங்கின. இதனால் ஏற்பட்ட போர் பதற்றத்தினை தணிக்கும் பொருட்டு, இரு நாடுகளும் தொடர்ந்துப் பலக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

பின்னர், இரு நாடுகளும் தங்களுடைய அதிகளவிலான படைகளை பின் வாங்கிக் கொள்வது எனவும், எல்லையில் அமைதிக் கொண்டு வர ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தன. இந்த சூழலில், லடாக் பகுதியில் இந்திய இராணுவத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29, 30ம் தேதிகளில் கைப்பற்றப்பட்ட மலைப் பகுதிகளில், தற்பொழுது சீனா தன்னுடைய இராணுவத்தினைக் குவித்து உள்ளது.

அந்தப் பகுதியில் அதி நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, இலகுரக பீரங்கிகளையும், டாங்கிகளையும் நிலை நிறுத்தி உள்ளது. இந்த டாங்கிகள் அனைத்தும், இந்திய நிலையினை நோக்கி நிறுத்தப்பட்டு உள்ளன. இது தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவும் தங்களுடையப் படைகளை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ராஜ்நாத்சிங், யாருடைய அச்சுறுத்தலுக்கும் இந்தியா பயப்படாது எனவும், இந்தியா அனைத்திற்கும் தயாராக உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS