விஜய் சேதுபதிக்கான கதை ரெடி! காலத்திற்காக காத்திருக்கும் சேரன்!

06 April 2020 சினிமா
cheranvijaysethupathi.jpg

விஜய் சேதுபதிக்கான கதை ரெடியாக உள்ளதாகவும், அதற்கான காலத்திற்காக காத்திருப்பதாகவும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், திருமணம் என்றப் படத்தினை இயக்குநர் சேரன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரும் ராஜாவுக்கு செக் என்றப் படத்தில், நாயகனாக நடித்தார். இருப்பினும், இரண்டுப் படங்களும் பெரிய அளவில் கைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் சேதுபதியினை தன்னுடைய திருமணம் படத்தின், பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார். அதில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு படத்தினை சேரனுடன் இணைந்து விரும்புவதாக கூறினார். அதற்கு அந்த மேடையில் பேசிய சேரன், விரைவில் ஒரு படத்தினை விஜய் சேதுபதியுடன் இணைந்து உருவாக்குவோம் எனத் தெரிவித்தார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதனிடையே, தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், சினிமா சூட்டிங்கானது தடை செய்யப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் பேசியுள்ள நபர் ஒருவர், சமீபத்தில் தவமாய் தவமிருந்துப் படம் பார்த்ததாகவும், அந்தப் படம் அற்புதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்துள்ள சேரன், விஜய்சேதுபதியுடன் இணையும் படம் குறித்தும் பேசினார்.

தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார்.

HOT NEWS