ஐஎஸ்எல் 2019! சென்னை முதல் வெற்றியை பெற்றது!

26 November 2019 விளையாட்டு
cfcvshfc.jpg

நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் போட்டியில், சென்னையின் எப்சி அணி, தன்னுடைய முதல் வெற்றியினை பெற்றது. ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் ஹீரோ ஐஎஸ்எல் போட்டியின் இந்த ஆண்டுக்கான ஆட்டம் தற்பொழுது, கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் பத்து அணிகள் இந்த ஆண்டு, ஐஎஸ்எல் போட்டியில் விளையாடி வருகின்றன. அதில், தமிழகத்தின் சார்பில் சென்னையின் எப்சி அணி விளையாடி வருகின்றது. இதுவரை மொத்தம் 23 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

23வது போட்டியாக நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், சென்னையின் எப்சி அணியும், ஹைதராபாத் எப்சி அணியும் நேருக்கு நேர் மோதின. இதுவரை, இந்த ஆண்டு ஒரு வெற்றிக் கூடப் பெறாத நிலையில், வென்றேத் தீர வேண்டும் என்ற முனைப்புடன் சென்னையின் எப்சி விளையாட ஆரம்பித்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து, கோல் அடிக்க தீவிரம் காட்டியது சென்னை அணி. ஆனால், ஹைதராபாத் அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தால், சென்னை அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கடைசியில் வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா டைமில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடித்தனர். கடைசியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் தன்னுடைய முதல் வெற்றியினைப் பதிவு செய்தது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாட சென்னை அணி, தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளதனை, அந்த அணியின் ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS