மகனை ஹீரோவாக்கி, மற்றவர்களை ஜீரோவாக்கிய அரசியல் பிரமுகர்!

23 October 2019 சினிமா
nammakadha.jpg

தன்னுடைய மகனை சினிமாவில் ஹீரோ ஆக்குவதற்காக, அவனுடன் படித்த மாணவர்களிடம் இருந்து பணம் பறித்த அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில், திமுக வட்டச் செயலாளராக இருப்பவர் எஸ்.எஸ் கண்ணன். இவருக்கு கவித்திரன் மற்றிம் நவித்திரன் என, இரண்டு மகன்கள். அவரில் ஒருவர் கவித்திரன். அவரை வைத்து, சினிமா படம் எடுத்துள்ளார் எஸ்எஸ்கண்ணன். நம்ம கத என்றத் தலைப்புடைய அந்தப் படத்தினை திரையிட்டும் உள்ளார். சரியாக இரண்டு முதல் மூன்று நாட்களே படம் ஓடிய நிலையில், அப்படத்தினை திரையில் இருந்து எடுத்துவிட்டனர்.

இதனைப் பயன்படுத்தி, அடுத்தப் படமான ரூட்டு என்றப் படத்தினையும் எடுக்க உள்ளதாக, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனை நம்பி, கண்ணனின் மகன்களுடன் படித்தவர்கள், தங்களுடையப் பணத்தினைக் கொடுத்து எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், கவித்திரனுடன் படித்த மூர்த்தி என்ற மாணவர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, இரவு பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் சேர்த்துள்ளார். அவ்வாறு அவர் சேர்த்த ஒன்றரை லட்சம் ரூபாயினை எடுத்து, அவர் தந்தையிடம் கொடுத்துள்ளார்.

காலம் தான் சென்றதே தவிர, படம் எடுக்கப்படவில்லை. பணமும் திருப்பித் தரப்படவில்லை. இதனால், எரிச்சல் ஆன மாணவர் மூர்த்தி, பணத்தினைத் திருப்பிக் கேட்டுள்ளார். அவர் பேசிய ஆடியோவும் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த மாணவனை, தகாத வார்த்தைகளால் திட்டிய கண்ணன், பணமே நான் வாங்கவில்லை என பொய் கூறிவிடுவேன், எனவே தேவையில்லாமல் எனக்கு போன் செய்யாதே, அப்படி செய்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது. என்று மிரட்டியுள்ளார். இதனால், பதற்றமடைந்த மாணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளான்.

மாணவனின் புகாரினை ஏற்றக் காவல்துறையினர், எஸ்.எஸ்.கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தன்னை சினிமாப் பிரபலமாக காட்டிக் கொண்ட கண்ணன், பல கலை நிகழ்ச்சிகளிலும், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS