சந்திராயன் 3 வரும் 2020ல் ஏவத் திட்டம்!

23 November 2019 தொழில்நுட்பம்
chandrayaan2launched.jpg

சந்திராயன் 2 திட்டத்தின் மூலம், நிலவின் தென் துருவப் பகுதிக்கு தன்னுடைய விக்ரம் லேண்டரை அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

ஆனால் எதிர்பாராத விதமாக, தரைக்கு 500 மீட்டர் உயரத்தில் இருக்கும் பொழுது, இஸ்ரோவுக்கும் லேண்டருக்கும் இடையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எதனால் ஏற்பட்டது என இதுவரைத் தெரியவில்லை. தொடர்ந்து, விக்ரம் லேண்டரை தேடும் பணியில் இஸ்ரோவும், உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் நாசாவும் ஈடுபட்டன. இருப்பினும், விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால், இந்த முயற்சி கிட்டத்தட்ட தோல்வி அடைந்ததாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் நிலவிற்கு தன்னுடைய அடுத்த விண்கலத்தை அனுப்ப உள்ளது இஸ்ரோ. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு தகவல் அளித்து விஞ்ஞானி, தற்பொழுது சந்திராயன் 3 விண்கலத்தின் ப்ராஜெக்ட் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான லேண்டரும் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கின்றார்.

மேலும், முந்தைய விக்ரம் லேண்டரை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், அதனுடைய கால்கள் மிக அதிக வலிமை உடையதாகவும் இருக்கும் வகையில் உருவாக்ககப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நிலவும் ஈர்ப்பு விசை மற்றும் எவ்வாறு திறன் பட லேண்டரை தரையிறக்குவது குறித்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திராயன் 3 திட்டத்தில் எந்த அளவு எடை கொண்ட விண்கலம் அனுப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நவம்பர் மாதம் 2020ம் ஆண்டுக்குள் சந்திராயன்3 விண்ணில் பாய வாய்ப்பிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Soruce:www.space.com/india-chandrayaan-3-moon-landing-2020.html

HOT NEWS