டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள்! பிராவோ உலக சாதனை!

26 August 2020 விளையாட்டு
djbravo.jpg

டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர் டிவைன் ப்ராவோ, புதிய உலக சாதனையினை படைத்துள்ளார்.

தற்பொழுது கரீபியன் கிரிக்கெட் தொடரில், ட்ரினிடாட் டொபாகோ என்ற அணிக்காக பிராவோ விளையாடி வருகின்றார். அவர் நேற்று எடுத்த விக்கெட்டுடன் சேர்த்து, சுமார் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். இதுவரை, யாரும் இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டுத் தொடர் முடிந்த உடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கா, ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

ஐபிஎல் உள்ளிட்ட மொத்தம் 459 டி20 கிரிக்கெட் போட்டிகளில் டிவைன் பிராவோ விளையாடி உள்ளார். அவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நேற்று அவர், 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதை, கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS