கற்பூரம் காட்டியதால் விபரீதம்! 80 லட்சம் மதிப்புள்ள படகு சாம்பல்!

21 December 2020 அரசியல்
fireone.jpg

சென்னையில் புதியதாக வாங்கிய படகிற்கு கற்பூரம் காட்டும் பொழுது ஏற்பட்ட தீ விபத்தால், 80 லட்சம் மதிப்புடைய படகானது எரிந்து சாம்பலானது.

சென்னை காசிமேட்டில், மீனவர் ஒருவர் சொந்தமாக படகு ஒன்றினை வாங்கியுள்ளார். சுமார் 60 லட்சம் மதிப்புள்ள அந்தப் படகில், 6,500 லிட்டர் டீசல், வலை, ஐஸ் கட்டிகள், உணவுப் பொருட்கள் எனப் பலவும் வைக்கப்பட்டு இருந்தன. தன்னுடைய முதல் கடல் பயணத்திற்கு அந்தப் படகு தயாராகி இருந்தது. இந்த சூழலில், அந்தப் படகின் டீசல் என்ஜினிற்குச் சென்ற குழாயில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை, யாரும் கவனிக்கவில்லை.

அந்தப் படகிற்கு, பூஜை செய்வதற்காக கற்பூரம் காட்டினர். அப்பொழுது, கற்பூரத்தில் இருந்த தீயினால், குழாயில் தீப் பிடித்தது. அந்தப் படகில் எரிபொருள் முழுவதுமாக இருந்ததால், தீயானது மளமளவென அடுத்தடுத்த பாகங்களுக்குப் பரவி படகு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களில் போலீசார் வந்தனர்.

இருப்பினும், படகில் இருந்த 6,500 லிட்டர் டீசல் காரணமாக படகில் இருந்து தீயினை அணைக்க முடியவில்லை. 80 லட்சம் மதிப்புள்ள அந்தப் படகானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

HOT NEWS