பிகில் படத்திற்குத் தடை கோரி வழக்கு!

15 October 2019 சினிமா
bigiltrailer.jpg

நடிகர் விஜய்க்கு மட்டும், எங்கிருந்து தான் பிரச்சனை வருமோ எனத் தெரியவில்லை. படம் வெளியாக இருக்கும் சில நாட்களுக்கு முன், பிரச்சனைகள் பறந்து வந்து விடுகிறது. ஒன்று அரசியல் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளாக இருக்கலாம் அல்லது அது கதைத் திருட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளாக இருக்கலாம்.

தற்பொழுது, நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில், உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில்.

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி, பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது பிகில் படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கே.பி.செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை என்னுடையது என்றும், அதனைத் திருடி பிகில் படம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவர் ஒரு உதவி இயக்குநர் ஆவார்.

இவருடைய மனுவினை, இன்று நீதிமன்றம் விசாரிக்கின்றது. இதனை ஏற்கனவே, சிவில் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தினை நம்பி இருக்கின்றார் உதவி இயக்குநர் கேபி செல்வா.

சர்கார் திரைப்படத்தின் கதை விவகாரம் பற்றி, நம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில், விஜய் இது போன்ற விஷயங்களை இனிமேலாவது கவனிக்க வேண்டும் என, சினிமா பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS