பூமி திரைவிமர்சனம்!

15 January 2021 சினிமா
bhoomireview.jpg

ஜெயம் ரவியின் 25வது திரைப்படமாக பூமி திரைப்படமானது தற்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி, ராதா ரவி, சதீஷ், தம்பி ராமையா, ரோனித் ராய், நிதி அகர்வால் மற்றும் சரண்யா மோகன் நடிப்பில், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், லஷ்மண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூமி. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசைமயைத்து உள்ளார். இந்தப் படம் திரையறங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் ஏன் வெளியானது என, முதலில் பலருக்கும் குழப்பம் வந்துள்ளது. காரணம், இதையெல்லாம் எந்த தைரியத்தில் படம் எடுத்திருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை. இந்தப் படம் ஏன் ஓடிடியில் வெளியானது என தற்பொழுது படத்தினைப் பார்த்தப் பின்னரே புரிகின்றது. இந்தப் படத்தினை திரையறங்கில் வெளியிட்டிருந்தால், கட்டாயம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை படத் தயாரிப்பாளர் தப்பித்தார். அனைத்து நஷ்டங்களுக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது ஓடிடி தளம் தான். ஆனால், அதன் நிலை கவலைக் கிடம் தான்.

படத்தின் தொடக்கத்தில் நாசா விஞ்ஞானியாக இருக்கின்றார் ஜெயம் ரவி. அவர் தமிழகத்தில் உள்ள தன்னுடைய மாமாவான தம்பி ராமையாவினை, அமெரிக்காவில் இருந்து வந்து சந்திக்கின்றார். இந்த சூழலில், தம்பி ராமையா திடீரென்று தற்கொலை செய்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து நாசாவில் இருந்து வெளியே வரும் ரவி, தன்னுடைய தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சனை என்ன என, ஆய்வு செய்கின்றார்.

கார்ப்ரேட் நிறுவனங்கள் எவ்வாறு லாபம் பார்க்கின்றனர் எனவும், அது எவ்வாறு விவசாய நிலங்களை சீரழிக்கின்றன எனவும் அவர் விவரிக்கின்றார். படத்தினை எடுக்க வேண்டும் என்பதற்காக எடுத்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது. அதே போல், படத்தினை முடிக்க வேண்டும் என்பதற்காக முடித்துள்ளனர் என்பதும் புரிகின்றது. கோயில் கலசங்கள் எதற்கு, பாரம்பரிய விவசாயம் எனப் பேசும் ரவி, படத்தின் 2 மணி நேரமும் பேசுகின்றார். பேசிக் கொண்டே இருக்கின்றார்.

இது படமா இல்லை விழிப்புணர்வு வீடியோவா என கண்டுபிடிக்க இயலாது. அந்த அளவிற்கு, இதனை உருவாக்கி உள்ளனர். இந்தப் படத்தின் ஹைலைட்டே கார்ப்பரேட் வில்லன் தான். ஒரு வில்லன், அவர் எவ்வாறு ஆட்களை அனுப்புகின்றார் எனக் காட்டவில்லை. வில்லனை எவ்வாறு ரவி பழி வாங்குகின்றார் எனவும் காட்டவில்லை. ஆனால், பழி வாங்குகின்றார். கோழி வளர்க்கின்றார். மாடு வளர்க்கின்றார். பயிர் வளர்க்கின்றார். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களை கொல்கின்றார்.

படத்தின் தேவையே இல்லாமல் ஒரு நாயகி. அவர் ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்படுவது ரொம்ப பெருமையான விஷயம். தமிழன் என்று சொல்லடா என ஆரம்பித்து, வந்தே மாதரம் என முடிவடைகின்றது. மொத்தத்தில் பூமி ஆள விடுடா சாமி.

ரேட்டிங் 1.5

HOT NEWS