பெங்களூரு- நார்த்ஈஸ்ட் யூனைடெட் போட்டி டிரா!

22 October 2019 விளையாட்டு
bengalurufc.jpg

ஐஎஸ்எல் 2019ம் ஆண்டுக்கானப் போட்டி, ஞாயிற்றுக் கிழமைத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில், கேரளா பிளாஸ்ட்டர்ஸ் அணி, அட்லட்டிக்கோ டீஈ கொல்கத்தா அணியினை 2-1 என்ற கணக்கில் வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களுரூவில் உள்ள, ஸ்ரீ காண்டிராவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முக்கிய வீரரான சுனில் சேத்ரி, பெங்களூரூ அணிக்காக விளையாடினார்.

தொடர்ந்து இரு அணிகளுமே, கோல் அடிப்பதில் அதிகத் தீவிரம் காட்டினர். இருப்பினும், நார்த் ஈஸ்ட் அணியினை விடை, பெங்களூரூ அணி கடுமையான விளையாட்டினை மைதானத்தில் வெளிப்படுத்தியது. இருப்பினும், இரண்டு அணிகளாலும் ஆட்டம் முடியும் வரை, கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனால், ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து, புள்ளிப் பட்டியலில், கேரளா முதலிடத்திலும், பெங்களூரூ இரண்டாம் இடத்திலும், நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன. முதல் போட்டியில் தோல்வி அடைந்து கொல்கத்தா அணி கடைசி இடத்தில் உள்ளது.

HOT NEWS