பக்ரீத் திரைவிமர்சனம்!

24 August 2019 சினிமா
bakrid.jpg

ரேட்டிங் 2.5/5

ஒரு பாசக்காரப் படம் தான் பக்ரீத். ஒரு இஸ்லாமியரிடம் கடன் வாங்கி இருக்கும் விக்ராந்த், அந்த இஸ்லாமியர் வீட்டில் விஷேசத்திற்காக ஒரு ஒட்டகத்தை குட்டியுடன் வாங்கி வந்துவிடுகின்றனர்.

அந்தக் குட்டியை அழைத்து வந்ததற்காக அந்த இஸ்லாமியர் சண்டைப் போடுகிறார். அந்தக் குட்டியை அழைத்துச் செல்லும் விக்ராந்த், ஒரு சிலக் காரணங்களுக்காக மீண்டும் அதனை ராஜஸ்தான் பகுதியில் கொண்டு சென்று விட்டு விடத் தீர்மானித்து அழைத்துச் செல்கிறார். அவர் அங்கு விட்டுவிட்டாரா? இல்லையா என்பது தான் கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை இந்த மாதிரி ஒரு கதை வந்ததில்லை. மிகவும் அமைதியாக, பரபரப்பு இல்லாமல் செல்லும் கதை. நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ள விக்ராந்த், வருடும் இசையினை அளித்துள்ள டி. இமான் என படம் நன்றாகவே உள்ளது.

இருப்பினும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால், இப்படம் உறுதியான வெற்றியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அருமை.

HOT NEWS