3வது டி20யில் ஆஸ்திரேலியா வெற்றி! கோப்பையினை கைப்பற்றிய இந்தியா!

08 December 2020 விளையாட்டு
indvsaust20cup.jpg

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில், இந்திய அணியானது 12 வித்தியாசத்தில் போராடித் தோல்வியினைத் தழுவியது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது, தற்பொழுது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே, ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றுக் 2-1 என்றக் கணக்கில், கோப்பையினைக் கைப்பற்றியது. இந்த சூழலில் டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்றக் கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. இன்று சிட்னியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் வேட் 80, பின்ச் 0, ஸ்மித் 24, மேக்ஸ்வெல் 54, ஹென்ரிக்கஸ் 5, சார்ட் 7 மற்றும் சாம்ஸ் 4 ரன்களை எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணிக் களமிறங்கியது.

இந்திய அணியானது 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து, 174 ரன்களைக் குவித்தது. இந்திய அணியின் வீரர்கள் கேஎல் ராகுல் 0, தவான் 28, கோலி 85, சாம்சன் 10, ஷ்ரேயஸ் ஐயர் 0, பாண்ட்யா 20, சுந்தர் 7, தாக்குர் 17, ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் வீரர்கள் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும், சாம்பா, மேக்ஸ்வெல், அபாட் மற்றும் டை ஆகியோர் தலா ஒரு விக்கெடும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணியானது 2-1 என்றக் கணக்கில் தொடரினைக் கைப்பற்றி உள்ளது.

HOT NEWS