அனல் பறக்கும் ஆஷஸ் தொடர்! ஸ்டீவ் ஸ்மித் சதம்!

02 July 2019 விளையாட்டு
ashes-smith.jpg

ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும், உலகப் பிரசத்திப் பெற்ற ஆஷஸ் தொடர் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பிர்மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேமிரோன் பேன்கிராப்ட் 25 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்தார். டேவிட் வார்னர் 14 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அடுத்துக் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 23 பந்துகளில் 13 ரன்கள் அடித்து, வோக்ஸ் பந்தில், பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 219 பந்துகள் விளையாடி 16 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 144 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவர், பிராட் பந்தில் போல்டாகி வெளியேறினார். டிராவிஸ் ஹெட் 61 பந்துகளில் 35 ரன்கள் அடித்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆகி வெளியேறினார்.

மேத்தியூ வேட் 1, டிம் பெயின் 5, பேட்டின்சன் 0, கும்மின்ஸ் 5, பீட்டர் சீடில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நாதன் லயன் 12 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 80.4 ஓவரில் 284 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில், பிராட் 22.4 ஓவர் வீசி, 4 மெய்டன் ஓவர் உட்பட 86 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஓக்ஸ் 21 ஓவரில் 2 மெய்டன் ஓவர் உட்பட, 58 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் மற்றும் மோயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் வீரர்கள், 2 ஓவரில் 10 ரன்கள் சேர்த்தனர். ராய் 6 ரன்களும், பர்ன்ஸ் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

HOT NEWS